மாசில்லா சிவகாசி

சிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது வெயிலில்தான் உணர முடிகிறது. மழை பொழிய மரங்கள் எவ்வளவு முக்கியமோ மன நிம்மதிக்கும் மரங்கள் அவசியம். தற்போது பெரும்பாலானோர் செடிகளின் அருமை உணர்ந்து மாடி, காலி மனையில் தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். பலர் புதிதாக வீடு கட்ட துவங்கும் போதே செடிகளையும் வளர்க்கிறார்கள். செடிகள், மரங்கள் வளர்ப்பதால் மனதிற்கு நிம்மதி ஏற்படுகிறது. இதை உணர்ந்து அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அந்த வகையில் சிவகாசி ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இங்கு வேம்பு, புங்கை, தேக்கு, உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. தினமும் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கப்படுகிறது. இது தவிர மா, கொய்யா, துளசி,…

Read More

அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், இணை இயக்குனர் உத்தண்டராமன் ஆய்வு செய்தனர். உதவி இயக்குநர் ரவிசங்கர், உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் பூவலிங்கம் உடனிருந்தனர்.

Read More

உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, என்றார். * காரியாபட்டி: மல்லாங்கிணறில் நடந்த முகாமில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது, தொகுதி வாரியாக குறைந்தது பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Read More

சிவகாசி : ”உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி : ”உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சவுந்திரபாண்டியனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல நாமும்தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை சமுதாய வளர்ச்சிக்காக மகமை என்ற பெயரில் கொடுத்தனர். அதை பின்பற்றி தான் 1952ல் ராஜாஜி ஆட்சியில் விற்பனை வரி முறை கொண்டு வரப்பட்டது,என்றார்.நாடார் மகாஜனசங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். டாக்டர் அய்யனார் ரத்தம் சேகரித்தார்.

Read More

இனி மதுரைக்கு போகவேண்டாம்: வந்தாச்சு எல்.இ.டி., போர்டுகள்

சிவகாசிகடைகள், நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அதை அடையாளப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்காக முகப்பில் பெரிதாக பெயர் எழுதப்பட்டு இருக்கும். சாதாரணமாக பெயின்டால் பெயர் எழுதியிருப்பர். இடத்தை பொறுத்து சிறிதாகவோ பெரிதாகவோ எழுதப்படும். முகப்பில் எழுதப்படும் பெயரின் தன்மையிலே அதன் தரத்தை உணர முடியும். தற்போது கடைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் எல்.இ.டி., ஒளிரும் பல்புகளால் பெயரை அலங்கரிக்கின்றனர். இதை பார்த்தவுடனே வாடிக்கையாளர்கள் கவரப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை இதுபோன்று அமைக்க மதுரையிலிருந்து ஆட்கள் வர வேண்டும். தற்போது மாவட்டத்தில் முதன் முறையாக சிவகாசி முருகன் கோயில் அருகே உள்ள பிரியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் ஒளிரும் எல்.இ.டி.,விளக்குகள் மூலமாக பெயர்களை அமைத்து தருகின்றனர். பொதுவாக ஒருமுறை அமைக்கப்பட்ட பெயரின் டிசைனை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் நிறுவனத்தினர் வந்து மாற்றி தர வேண்டும். ஆனால்…

Read More

நாளை(செப்.21) மின்தடை

(காலை 8:00 – மாலை5:00 மணி)ராஜபாளையம் அய்யனார் கோயில், ராஜூக்கள் கல்லுாரி பகுதிகள், தாட்கோ காலனி திருவள்ளுவர் நகர், தென்றல்நகர், சோமையாபுரம் சம்மந்தபுரம், சின்ன, பெரிய சுரைக்காய்பட்டி தெரு, பழையபாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, பெரியகடை பஜார்* சேத்துார் தேவதானம், கோவிலுார், புத்துார், கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான் தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம்.

Read More

சதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். செப்.15 முதல் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மகாளய அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். அதிகாலையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு திரண்டனர். காலை 6:45 மணி முதல் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனதுர்க்கை, இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமி கோயில்களில் வழிபட்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னிதிகளில் வரிசையில் நின்று நாகாபரணம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை தரிசித்தனர்.மலை அடிவாரத்தில் ஏராளமான டூவீலர், கார், வேன்களில் பக்தர்கள் வந்த நிலையில் போதியளவிற்கு போலீசார் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அரசு…

Read More

ஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் காலை 7:20 மணி முதல் மதியம் 12:30, மாலை 4:00 – 6:00, இரவு 7:00 – 8:00 மணி வரை அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள்.

Read More

ஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்

விருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலைப்பணியில் ஈடுபடுகின்றனர். எல்லா கலைகளையும் விட கடினமானது ஓவிய கலை. வரைவது எளிதல்ல. உணர்வுப்பூர்வமாக உள்ளிருந்து வருவதே ஓவியம். ராணுவ மைதானங்களில் ஓடிய ஓட்டங்களில் ஓவியம் எனும் கலையை இறுகப்பிடித்து ஓய்வின் வாயிலாக தன்னை ஓவியராக்கி உள்ளார் விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த ஆறுமுகசோமு. இவர் 1965 முதல் 82 வரை 17 ஆண்டுகளாக ராணுவத்தில் சர்வேயராக பணிபுரிந்துள்ளார். கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்கான ஓவியங்கள் வரைந்து நற்பெயரையும் பெற்றுள்ளார். பேனாவில் ஓவியம் வரைவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் திருத்த இயலாது. நேர்த்தியான ஒருமைப்பாட்டுடன் வரைந்தால் மட்டுமே முழுமையாக வரைய…

Read More