Government

அரசு லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊராட்சிகளில் குளியல் தொட்டிகள் கட்டுகின்றன . குளியல் தொட்டி புதிதாக கட்டப்பட்டு திறந்த நாளோடு சரி அதன்பின் யாரும் கண்டு கொள்வதில்லை. தண்ணீர் இல்லை, மின் மோட்டர் பழுது, கட்டட சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் குளியல் தொட்டிகள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது. முறையாக பராமரிக்காததால் பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே உள்ளன. இனியாவது உள்ளாட்சி நிர்வாகங்கள் குளியல் தொட்டிகளை சுத்தப்படுத்தி மின் மோட்டர்களை பழுது செய்து தண்ணீர் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment