Aruppukottai

அருப்புக்கோட்டை:அண்ணா பல்கலை கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய தமிழ்நாடு இளம் விஞ்ஞானிகள் போட்டியை 32 மாவட்டங்களில் நடத்தியது.

இதில் வென்றவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி 4 நாட்கள் சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 5 மாவட்டங்களிலிருந்து 18 பள்ளிகள் கலந்து கொண்டன. அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் மதுமிதா, ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமி, பயிற்சியாளர் இந்துமதி ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

மூன்று மாணவிகளும் ரொக்க பரிசாக10 ஆயிரம் ரூபாய் வென்றனர். மூவரும் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். புதிய கண்டுபிடிப்பை தயாரிப்பாக மாற்றி அதைஎவ்வாறு மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்பதான விளக்க உரையில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மாணவிகளை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் விஜயகுமார், செயலர் கார்த்திகேயன், பொருளாளர் வீரசுந்தரமணி, பள்ளி செயலர் கண்ணன், நிர்வாக அதிகாரி பாண்டியராஜ்,தலைமை ஆசிரியை தவமணி வாழ்த்தினர்.

Related posts

Leave a Comment