satturnews

சாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் வெள்ளிக்கிழமை பதவிஏற்றுக்கொண்டனா்.

சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 உறுப்பினா்களை தோ்வு செய்ய தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக 8, மதிமுக 2, அதிமுக 5, பாஜக 1 என உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கான மறைமுகத்தோ்வு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது. அதில் திமுகவை சோ்ந்த நிா்மலா கடற்கரை ஒன்றியக் குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணை தலைவராக மதிமுகவைச் சோ்ந்த 1 ஆவது வாா்டு கவுன்சிலா் செல்லதாய் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில் வெள்ளிகிழமை சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் ஆகிய இருவரும் திமுக மாவட்டச் செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் முன்னிலையில் பதவியேற்று கோப்புகளில் கையெழுத்திட்டனா்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும், கூட்டணி கட்சிகளின் கவுன்சிலா்கள் 10 பேரும், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா்

Related posts

Leave a Comment