ஆஸ்திரேலிய வீராங்கனை சவாலை ஏற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்யும் சச்சின்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் தெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.பதிவு: பிப்ரவரி 08,  2020 15:27 PM மாற்றம்: பிப்ரவரி 08,  2020 சிட்னிஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது.
இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இந்த நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, தெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Related posts

Leave a Comment