சாத்தூரில் உள்ள PSNL B.Ed கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாசலபதி* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*
Read MoreDay: February 11, 2020
*விருதுநகர் மாவட்டம் 11.02.2020*
குழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, அருப்புக்கோட்டை தாலுகா எல்லைக்குட்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள GSD நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி*, அவர்கள் மற்றும் *சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி* அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*
Read Moreஇருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் குரு பக்தி
ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறந்துவிட மாட்டோம், என மனம் உருகிய இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள தனது ஆசிரியரை சந்தித்து ஆறுதல் கூறினார். #Railwaydgp#sylendrababuips#teacher#TamilNaduPolice#TNPolice#TruthAloneTriumphs#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar
Read Moreஇன்று 11.02.2020 ம் தேதி
காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால்¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் காவல்துறை உதவி தலைவர் திருமதி. V.சியாமளா தேவி அவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். #TNPolice#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar
Read More12-02-2020
மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம்: பிரதமரின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி
டெல்லி: டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
Read Morecongratulations sister
#CORONAVIRUS
மணல் ஓவியரின் அசத்தல் முயற்சி WeStandWithChina | #SandArt | #CORONAVIRUS
Read Moreஸ்ரீவில்லிபுத்தூாில்_பூக்குழி
விருதுநகா்_மாவட்டம்… நமது ஸ்ரீவில்லிபுத்தூாில் 15000_க்கும்_மேற்பட்டோா் பூக்குழி_இறங்கும் மிக பிரசித்தி பெற்ற…. புராணகால வரலாறுகள் கொண்ட….. ஸ்ரீஅருள்மிகு_பொியமாாியம்மன் #கோயிலின் பூ( தீ )க்குழி திருவிழா இந்தாண்டு 23_03_2020அன்று நடைபெற உள்ளது… அனைவரும் வாருங்கள்…..
Read Moreசிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை
திங்கள் காலை 10 மணிக்கு கூடுவோம் கடந்த ஞாயிறன்று சிவகாசியில் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நடந்தது. அதில் ஓராண்டாக கவனிக்கப்படாமல் இருக்கும், சிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை விரைவாக முடிக்க என்ன செய்யலாம் என்ன முடிவெடுத்தோம். ஏற்கனவே ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு முற்றுகை, ஒருமுறை விசாரித்தல் என பல வழிகள் முயற்சிக்கப்பட்டும் காரணங்கள் கிடைத்தது தவிர தீர்வு கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னரே காளீஸ்வரி – வாட்டர் டேங்க வாறுகால் பணி முடித்துவிடுவோம் என்றார்கள். பிறகு மழை என்றார்கள், அடுத்து தேர்தல் என்றார்கள், இப்போது வேறு ஒரு டெண்டர் என்கிறார்கள். நமக்கு காரணங்கள் தேவையில்லை தீர்வே தேவை என வரும் திங்கள் சிவகாசி இரட்டைப்பாலம் அருகே மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அதற்கான நோட்டீஸ்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. கூடவே…
Read More