ராஜபாளையம்:ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. வைமா கல்வி குழும தலைவர் திருப்பதிசெல்வன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் அருணா முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் ராஜா தேசிய, மாநில, மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் தேசியக் கொடி , ஓய்வு சுகாதார துணை இயக்குநர் ராஜாகுணசீலன் ஒலிம்பிக் கொடி ஏற்றி விழாவினை துவக்கினர். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. பள்ளிதுணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.
ராஜபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கண்ணன், எஸ்.பி. மாடர்ன் பள்ளி தாளாளர் ஜெயபாரதி,கேசா டி மிர் பள்ளி இயக்குநர் ரவிசங்கர் பரிசு வழங்கினர்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாபு ஆண்டறிக்கைவாசித்தார்.
ஒருங்கிணைப்பாளர் மாங்கனி நன்றி கூறினார்.