சிவகாசி:சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லுாரியில் புதிய நவீன நுாலகம் திறப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் ராஜேஸ்தாஸ் திறந்து வைத்து பேசுகையில், ”யாரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக கூடாது.நான் படிக்கிற காலத்தில் அதிகளவில் சாதி கலவரம் ஏற்பட்டுள்ளது. ஆனால்தற்போதுநமது மாநிலம் சாதி கலவரம் இல்லா மாநிலமாக மாறி விட்டது. தினமும் கல்லுாரி நேரம் முடிந்த பின் நுாலகத்தை பயன்படுத்த வேண்டும்,”என்றார்.
கல்லுாரி செயலர் செல்வ ராசன் தலைமை வகித்து பேசுகையில், ”2000ல் 48 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இக்கல்லுாரி இன்று 3000 மாணவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
மாணவர்களின் நலன் கருதி புதிய நவீன நுாலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்நுாலகம் மாணவர்களின் வாழ்க்கை மேம்படுத்த உதவும்,”என்றார்.
விருதுநகர் எஸ்.பி., பெருமாள் கலந்து கொண்டார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.