மனு ஆன்லைன் பதிவு நிறுத்தம்

விருதுநகர்:விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றாததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு பதிவு செய்யும் முறை ஆன்லைன் மயமாக்கப்பட்டது. விருதுநகரில் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் ஆன்லைனில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக மனுக்கள் எழுதி பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மனுக்களை எழுதி கொடுப்பதில் தாமதம், சிரமும் ஏற்பட்டுள்ளது.

மனுபிரிவு ஊழியர்களிடம் கேட்ட போது, ‘இணைய நடைமுறை மிகவும் மெதுவாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் கூட்டத்திற்கு ஏற்ற முறையில் மனுக்களை பதிவு செய்ய முடியவில்லை. மொத்தமாக மனுக்களை எழுதிவிட்டு பின் இணையத்தில் ஏற்றிவிடுவோம்,’ என்கின்றனர். இணைய நடைமுறையில் பதிவேற்றம் செய்யப்பட்ட அடுத்த நொடியில் புகார்தாரரின் அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் சென்று

விடும். ஆனால் தற்போது அவ்வாறு வருவதில்லை என மனு அளிக்க வரும் புகார்தாரர்கள் கூறுகின்றனர்.

குறைதீர் கூட்டத்தில் வாங்கப்படும் மனுக்கள் உண்மையில் பதிவு செய்யப்படுகிறதா,அதிகாரிகள் பதில் போல் காற்றில் விடப்படுகிறதா என சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

Related posts

Leave a Comment