சிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை

திங்கள் காலை 10 மணிக்கு கூடுவோம்

கடந்த ஞாயிறன்று சிவகாசியில் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நடந்தது. அதில் ஓராண்டாக கவனிக்கப்படாமல் இருக்கும், சிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை விரைவாக முடிக்க என்ன செய்யலாம் என்ன முடிவெடுத்தோம்.

ஏற்கனவே ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு முற்றுகை, ஒருமுறை விசாரித்தல் என பல வழிகள் முயற்சிக்கப்பட்டும் காரணங்கள் கிடைத்தது தவிர தீர்வு கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னரே காளீஸ்வரி – வாட்டர் டேங்க வாறுகால் பணி முடித்துவிடுவோம் என்றார்கள். பிறகு மழை என்றார்கள், அடுத்து தேர்தல் என்றார்கள், இப்போது வேறு ஒரு டெண்டர் என்கிறார்கள்.

நமக்கு காரணங்கள் தேவையில்லை தீர்வே தேவை என வரும் திங்கள் சிவகாசி இரட்டைப்பாலம் அருகே மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அதற்கான நோட்டீஸ்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. கூடவே எங்கள் அதிர்வு தமிழிசையகத்தின் பறையும் இசைத்தது. பல பொதுமக்கள் விபரங்கள் கேட்டு வாங்கினார்கள். பல ஆட்டோ தொழிலாளர்கள் நிச்சயம் நாங்களும் பங்கேற்கிறோம் என்றார்கள்.

#அதிமுக #திமுக #பாமக#பிஜேபி என பல கட்சிகள் இருந்தும் இதற்கான விடிவு இன்னும் இல்லை. இப்போது மக்களாக ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறோம். வாருங்கள் இது ஒரு சாலைக்கான போராட்டம் மட்டுமில்லை, இதில் நாம் ஜெயித்தால் சிவகாசி பிரச்சினைகளுக்கு மக்கள் ஒன்று சேருவார்கள் என அதிகாரம் இனி கொஞ்சம் காது கொடுத்து கேட்கும்.

திங்கள் காலை 10 மணிக்கு கூடுவோம்.

Related posts

Leave a Comment