*விருதுநகர் மாவட்ட காவல்துறை*

*விருதுநகர் மாவட்டம்* 12.02.2020 👉🏻விருதுநகர் போக்குவரத்து காவல் *உதவி ஆய்வாளர் திரு. மரிய அருள்*, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய *சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமை காவலர் திரு. திம்மி ரெட்டி குணசேகரன், பெண் முதல் நிலை காவலர் திருமதி. வெயிலு கங்கா விஜி, காவலர் திரு. மகேந்திர குமார் மற்றும் பெண் காவலர் திருமதி. சித்ராதேவி* ஆகியோர் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிளுக்கு, காவலன் SOS செயலியின் பயன்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர். #tnpoliceforu#szsocialmedia1#virudhunagar

Read More

13-02-2020 வரலாற்றில் இன்று :

சர்வதேச வானொலி தினம் இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879) ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668) பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960) பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)

Read More

#DelhiElection #PrashantKishor #AamAadmi

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: பிரசாந்தின் ஐடியாவால் கெஜ்ரிக்கு கிடைத்த வெற்றி  புதுடில்லி: நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலுக்கு ஆம்ஆத்மி கட்சிக்கு ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியதாகவும், அவ்வாறு செய்ததாலேயே அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அக்கட்சிக்கு ஆலோசனை வழங்கிய இந்திய அரசியல் நடவடிக்கை குழு (ஐபாக்) தலைவர் பிரசாந்த் கிஷோர் தான். அவரின் ஆலோசனையையே ஆம்ஆத்மி பின்பற்றி வந்தது. டில்லியில் ஆட்சியை தக்கவைக்க முதல்வர் கெஜ்ரிவாலிடம், 2015ல் அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுமாறு பிரசாந்த் அறிவுறுத்தினார். அதனாலேயே, 2015ல் நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி அளித்த வாக்குறுதிகளான இலவச வைபை, பெண்களுக்கு இலவச பஸ்…

Read More

rajapalayam

இராஜபாளையத்தில் சுந்தரி சாந்திலால் நூலகம் திறப்புவிழா நேற்று (09-02-2020) நடந்தது. அதே நாளில் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அரசு கிளை நூலகத்தில் பெயர்ப்பலகை இல்லாததால் புது பெயர்ப்பலகை பகிர்வு அறக்கட்டளை சார்பில் வைக்கப்பட்டது.

Read More

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய மாணவர் குவியுது பாராட்டுக்கள்

விருதுநகர்:விருதுநகரில் விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய மாணவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோட்டில் டூவீலரில் சென்றவர் வேகத்தடையை கவனிக்காமல் முன்னே சென்ற காரின் மீது மோதி காயமடைந்தார்.மூக்கில் ரத்தம் வடிய சுய நினைவை இழந்து கீழே விழுந்து கிடந்த போது யாரும் துாக்க முன்வரவில்லை. பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவ்வழியே சென்ற விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி 2ம் ஆண்டு சிவில் துறை மாணவர் கணேசமூர்த்தி காயமடைந்தவர் தலையை பிடித்து தன் மேல் சாய்த்து கொண்டார். கீழே படுக்க வைத்தால் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம் மூளைக்கு சென்று விடும் என்பதை அறிந்து தன் மேல் சாய்த்து கொண்டார். இன் பின் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால் உயிர்தப்பினார். உதவிக்கு யாருமே முன்வராத நிலையில்…

Read More

இலவச கண் பரிசோதனை முகாம்

விருதுநகர் :ராம்கோ சமூக சேவைக்கழகம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பில் கண்பரிசோதனை முகாம் ஆர்.ஆர்.நகர் ஸ்ரீராம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன மூத்த உப தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் மருத்துவனை மருத்துவ குழுவினர் மருத்துவப்பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை ராம்கோ சமூக சேவைக்கழக தொண்டர்கள் செயலாளர் தேவராஜா செய்திருந்தார்.

Read More

விருதுநகரில் தமிழ்நாடு ஆசிரியர்

கல்வியியல் பல்கலைகழகம் சார்பில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தனர்.100மீ., 200மீ., 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணை பேராசிரியர் நாகசுப்ரமணி பங்கேற்றார்.வெற்றி பெற்றஆசிரியர்களுக்கு ஏ.எஸ்.பி., சிவபிரசாத் பரிசுகள் வழங்கினார். ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரி முதல்வர் ராஜா போட்டிகளை நடத்தினார்.

Read More