கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 71வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ஜெயகுமார் துவக்கி வைத்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பிச்சுமணி பட்டங்களை வழங்கி பேசினார். 578 இளநிலை மற்றும் 265 முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லுாரி பரிபாலன சபைத் தலைவர் வன்னியானந்தம், பொருளாளர் முத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment