சாத்துார்:சாத்துார் ஸ்ரீ எஸ். ஆர் . என் . எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் தனலட்சுமி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் விக்னேஷ் வரவேற்றார். டாக்டர் ராஜ்குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் பேசினர். கை கழுவும் முறை பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஆங்கிலத்துறை விரிவுரையாளர் வசந்தி நன்றி கூறினார்.தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு இயக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
கொரோனா வைரஸ் முகாம்
