சாத்தூரில் குறைதீர் கூட்டம்

சாத்துார்:சாத்துார் ஆர். டி.ஓ., அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. விருதுநகர் தனி துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். விருதுநகர் துணை ஆட்சியர் (பயிற்சி) சரஸ்வதி, முன்னிலை வகித்தார்.ஆர்.டி.ஓ. ,காளிமுத்து வரவேற்றார். 84 மனுக்கள் பெறப்பட்டது. 15 நபர்களுக்கு ரூ. 14.50 லட்சம் விபத்து நிவாரண காசோலை வழங்கப்பட்டது. பயனாளிக்கு முதியோர் உதவித் தொகைக்கான சான்று வழங்கப்பட்டது. சாத்துார், வெம்பக்கோட்டை, ராஜபாளையம் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment