விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய மாணவர் குவியுது பாராட்டுக்கள்

விருதுநகர்:விருதுநகரில் விபத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய மாணவரை

பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோட்டில் டூவீலரில் சென்றவர் வேகத்தடையை

கவனிக்காமல் முன்னே சென்ற காரின் மீது மோதி காயமடைந்தார்.மூக்கில் ரத்தம் வடிய சுய

நினைவை இழந்து கீழே விழுந்து கிடந்த போது யாரும் துாக்க முன்வரவில்லை. பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவ்வழியே சென்ற விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி 2ம் ஆண்டு சிவில் துறை மாணவர் கணேசமூர்த்தி காயமடைந்தவர் தலையை பிடித்து தன் மேல் சாய்த்து கொண்டார்.

கீழே படுக்க வைத்தால் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம் மூளைக்கு சென்று விடும் என்பதை அறிந்து தன் மேல் சாய்த்து கொண்டார். இன் பின் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு

மருத்துவமனையில் அனுமதித்தனர்.உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால் உயிர்தப்பினார். உதவிக்கு யாருமே முன்வராத நிலையில் மாணவர் முன்வந்து உதவிய

மனிதநேயம் மிகுந்த செயலை சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

One Thought to “விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய மாணவர் குவியுது பாராட்டுக்கள்”

Leave a Comment