சைக்கோ படத்துல ஒண்ணும் இல்லை.. பாரம் படத்துக்கு போஸ்டர் ஒட்டப் போறேன்..
இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், தனது சைக்கோ படத்தில் ஒன்றும் இல்லை என்றும், இந்த படத்திற்கு தான் தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டப் போகிறேன் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு விரைவில் ரிலீசாகவுள்ள இந்த பாரம் திரைப்படம் கடந்த ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வயதான வாட்ச்மேன் தந்தையை பார்த்துக் கொள்ள முடியாத மகன், தலைகூத்தல் எனும் முறைப்படி எப்படி கொல்கிறான் என்பதை வலியுடனும், வேதனையுடனும் பறைசாற்றி உள்ளது இந்த பாரம் என மிஷ்கின் புகழ்ந்து பேசியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில், வயதான பெற்றோர்களை பார்க்க முடியாதவர்கள், இன்னமும் கிராமங்களில் இரண்டு நாள் தலையில் எண்ணெய் தேய்த்து, ஐஸ் தண்ணீரில் முக்கி, இளநீர் கொடுத்து கொல்லும் பாதக செயல் நடைபெற்று வருவதை இந்த படம் வெளிக்காட்டியுள்ளது. குழந்தைகளுக்கு கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் வழக்கத்தை மையமாக வைத்து கருத்தம்மா படம் எடுக்கப்பட்டிருந்தது.