நம் இந்திய இராணுவத்தில் பணியில் இருக்கும் போது புல்வாமா தாக்குதலில் இதே நாளில் உயிர்த்தியாகம் செய்த*K.சுப்பிரமணியன்* அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெண்மண்டலத்தின் தளபதி கடம்பூரின் இளைய ஜமீன்தார் எங்களின் ராஜா கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களால் சவலாப்பேரி கிராமத்தில் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டு அண்ணாரின் மனைவி மற்றும் அம்மா அப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் நமது விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *G.சாமிக்காளை கலந்து கொண்டார் *ஜெய்ஹிந்த்*
Read MoreDay: February 15, 2020
இன்று விருதுநகர் மாவட்ட ஜூடோ போட்டி
இன்று விருதுநகர் மாவட்ட ஜூடோ போட்டி சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியை விருதுநகர் விளையாட்டு உள் அரங்கில் நடைபெற்ற ஜீடோ போட்டியை மாண்புமிகு:பால்வளத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜிஅவர்கள் தொடங்கி வைத்தார்..
Read Moreஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்
விருதுநகர் மாவட்டம் விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு:; பால்வளத்துறை அமைச்சர். 💐💥கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு:; கண்ணன்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்உயர்திரு:;M.S.R. ராஜவர்மன் மற்றும் பலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்
Read More3,500 தற்காலிக ஆசிரியர் நியமனம்
சென்னை: அரசு தொடக்க பள்ளிகளில், 3,500 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தொடக்க, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள், எல்.கே.ஜி., மழலையர் வகுப்புகள் துவக்கம்; &’ஸ்மார்ட்&’ வகுப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த வரிசையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 3,500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய ஆசிரியர்களை நியமிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.&’தற்காலிக பணி என்றாலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் மட்டுமே, விண்ணப்பங்களை…
Read Moreஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி
ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.
Read Moreஉசைன் போல்டை மிஞ்சும் வேகம்
மங்களூரு : சர்வதேச அளவில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஓடி சாதனை படைத்து, புகழ்பெற்றவர் உசைன் போல்ட். இவரை மிஞ்சும் அளவிற்கு வேகமாக ஓடி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் கர்நாடகாவை சேர்ந்த கம்பாளா எருது பயிற்சி வீரரான ஸ்ரீநிவாச கவுடா (28). கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான கம்பாளாவில் வேகமாக ஓடும் எருதுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார். இந்த போட்டியில் 2013 ம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா. கலந்து கொண்டு வருகிறார். எருதுகளுக்கு கம்பாளாவில் பங்கேற்க பயிற்சி அளிப்பவராக இவர் உள்ளார். இவர் கடந்த 1ம் தேதி நடந்த கம்பாளா போட்டியில், மொத்த தூரமான 142.5 மீ., 13.62 வினாடிகளில் கடந்தார். 100 மீ., தூரத்தை 9.55…
Read Moreபொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரிசர்வ்லயனில் ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர். வீ.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார் website link http://www.vlakshminarayanan.com/
Read Moretamilnadu budget ops
தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புகள்..! 1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு. 2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. 3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. 4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 6. சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். 7. உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு. 8. சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு. 9. சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு. 10. வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11. கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு. 12. பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991…
Read Moreஎதற்கும், யாருக்கும் பத்தாத பட்ஜெட் ; ஸ்டாலின்
ஸ்டாலின்: துணை முதல்வர், பட்ஜெட்டை, 196 நிமிடம் படித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர், 159 நிமிடங்கள் படித்தார். மத்திய அரசை, எப்படி அ.தி.மு.க., பின்பற்றுகிறது என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. பட்ஜெட்டில், ‘ஜெ., மறைவுக்கு பின், இந்த அரசு நீடிக்காது என, சிலர் கூறி வந்தனர்’ என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில், ஜெ., சமாதியில் உட்கார்ந்து, தியானம் செய்தது; ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியது; ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது யார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவருக்கு இது, பத்தாவது பட்ஜெட்; யாருக்கும் பத்தாத பட்ஜெட்; எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
Read Moreதொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்
Read More