அடிப்படை வசதியின்றி அல்லல் தவிப்பில் கருப்பசாமி கோயில் தெரு மக்கள்

சாத்துார்:சாத்துார் அமீர்பாளையம் கருப்பசாமி கோயில் தெருவில் ரோடு, வாறுகால்

வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பகுதியில் அரிசி ஆலை, தீப்பெட்டி

தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் இத்தெருவில் ரோடு போட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாவதால்குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாறுகால்கள் தூர்ந்து போன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. பொது கழிப்பறை வசதி இன்றி காலி இடங்களையும் ஆற்றுப் பகுதி யையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
தெருவிளக்குகள் அடிக்கடி எரியாததால் இரவு நேரத்தில் கையில் விளக்குடன் நடமாடும் நிலை உள்ளது. ரோடு, வாறுகால், மற்றும் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

குடிநீர் பற்றாக்குறை

ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வருகிறது. அதுவும் குறைந்த நேரம்தான் வினியோகம் செய்யப்படுகிறது. வீட்டிற்கு 4 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. பலர் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. வண்டியில் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்துகிறோம். தட்டுப்பாடுயின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

Related posts

Leave a Comment