உசைன் போல்டை மிஞ்சும் வேகம்

மங்களூரு : சர்வதேச அளவில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஓடி சாதனை படைத்து, புகழ்பெற்றவர் உசைன் போல்ட். இவரை மிஞ்சும் அளவிற்கு வேகமாக ஓடி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் கர்நாடகாவை சேர்ந்த கம்பாளா எருது பயிற்சி வீரரான ஸ்ரீநிவாச கவுடா (28).

கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான கம்பாளாவில் வேகமாக ஓடும் எருதுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார். இந்த போட்டியில் 2013 ம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா. கலந்து கொண்டு வருகிறார். எருதுகளுக்கு கம்பாளாவில் பங்கேற்க பயிற்சி அளிப்பவராக இவர் உள்ளார். இவர் கடந்த 1ம் தேதி நடந்த கம்பாளா போட்டியில், மொத்த தூரமான 142.5 மீ., 13.62 வினாடிகளில் கடந்தார். 100 மீ., தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

2017 ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போட்டு அந்த இலக்கை 9.69 வினாடிகளில் கடந்தார். இதுவே இதுவரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதனை மிஞ்சம் வகையில் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் ஸ்ரீநிவாஸ் கடந்துள்ளார்.

இவரை உசைன் போல்டுடன் ஒப்பிட்டு காங்., எம்.பி.,யான சசிதரூர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடகாவில் நடந்த கம்பாளா போட்டியில் ஸ்ரீநிவாஸ் என்ற இளைஞர் ஒருவர் எருதுகளுடன் 100 மீ., தூரத்தை வெறும் 9.55 வினாடிகளில் கடந்துள்ளார். உசைன் போல்ட்டை விட வேகம். இவரை தடகள போட்டியில் சேர்த்து, ஒலிம்பிக்கில் சாம்பியன் ஆக்கும்படி இந்திய தடகள கழகத்தை கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மறைந்துள்ள எத்தனை திறமைசாலிகள் நம்மிடம் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கம்பாளா அகாடமியின் செயலாளரான குணபாலா கடம்பா கூறுகையில், அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இவர் கம்பாளா கழகத்தில் மாணவர். இவர் இந்த ஆண்டு 11 கம்பாளாக்களில் கலந்து கொண்டு 32 பரிசுகளை வென்றுள்ளார். ஒவ்வொரு கம்பாளாவிலும் இவர் குறைந்தது 2 பரிசுகளையாவது வென்று விடுவார். இவரை நாங்கள் உசைன் போல்டுடன் ஒப்பிட முடியாது. ஓட்டப் போட்டி மற்றும் கம்பாளாவின் பாதைகள் மற்றும் நீளம் வேறுபட்டவை என தெரிவித்துள்ளார். இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஸ்ரீநிவாசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், திறமைசாலிகளை இந்தியா ஒரு போதும் வீணடிக்காது. அவரை இந்திய விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர்த்து கொள்வோம் என்றார்.

Related posts

Leave a Comment