எதற்கும், யாருக்கும் பத்தாத பட்ஜெட் ; ஸ்டாலின்

ஸ்டாலின்: துணை முதல்வர், பட்ஜெட்டை, 196 நிமிடம் படித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர், 159 நிமிடங்கள் படித்தார். மத்திய அரசை, எப்படி அ.தி.மு.க., பின்பற்றுகிறது என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. பட்ஜெட்டில், ‘ஜெ., மறைவுக்கு பின், இந்த அரசு நீடிக்காது என, சிலர் கூறி வந்தனர்’ என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில், ஜெ., சமாதியில் உட்கார்ந்து, தியானம் செய்தது; ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியது; ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தது யார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவருக்கு இது, பத்தாவது பட்ஜெட்; யாருக்கும் பத்தாத பட்ஜெட்; எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

Related posts

Leave a Comment