கண் தெரியாத மாற்றுத்திறனாளிகள்:தவியாய் தவிக்கும் தாய்,மகன்

சாத்துார்:சாத்துார் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி 77. இவர் மகன் ராஜேஸ்வரன் 35. இருவரும் கண்பார்வை தெரியாத மாற்றுதிறனாளிகள்.

மாதம் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ 1000 அரசு உதவிதொகையை பெற்று வருகின்றனர். தற்போது குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்றுவிட்டதால் காலி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். கண் பார்வை தெரியாத நிலையில் வீட்டில் பாத்திரம் கழுவி வேலை பார்த்து வந்த விஜயலட்சுமி தற்போது அந்த வேலையும் இன்றி தவிக்கிறார்.

இந்நிலையில் கண்பார்வை இல்லாத தனக்கு வீடு வழங்க வேண்டும் என தாலுகா அலுவகத்தில் முறையிட்டும் உதவி கிட்டவில்லை. விஜயலட்சுமியும் கூறியதாவது: 5 வயது இருக்கும் போது எனது மகனுக்கு இரு கண்ணும் பாதித்தது . கண்ணில் பிரஷர் இருந்ததால் பார்வை பறிபோனது. நானும் வீட்டுவேலைக்கும் எனது மகனும் தீப்பெட்டி ஆபிசிலும் வேலை செய்து வந்தோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்த கொதிப்பு காரணமாக எனது கண்பார்வையும் தெரியாமல் போனது. குடியிருக்கும் வாடகை வீட்டை சொந்தக்காரர் விற்றுவிட்டதால் காலி செய்ய சொல்கிறார். எங்கு செல்வது என்று தெரியவில்லை. விறகு அடுப்பில் சமையல் செய்தால் வீடு தரமாட்டோம் என கூறுகிறார்கள். கண்பார்வை இல்லாததால் காஸ் அடுப்பு பயன்படுத்த தெரியாது. அரசுதான் உதவ வேண்டும்,” என்றார்.

இவர்களுக்கு உதவ 87546 46264ல் அழைக்கலாம்.

Related posts

Leave a Comment