சாதிக்கும் சாலைப்பணியாளர்

ஸ்ரீவில்லிபுத்துார்:பரபரப்பான இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு என ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

தனித்திறமை பெற்றவர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, வாள்-கேடயம் என பல்வேறு கலைகளிலும் சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சாலைபணியாளர் வெங்கடேஸ்வரன் 54.

இவர் மேட்டுதெருவை சேர்ந்த வீரபுத்திரர் என்ற குருநாதரிடமிருந்து 12 வயதில் சிலம்ப கலையை கற்க ஆரம்பித்தார். தனது 24 வயதிற்குள் சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, போர்கலை பயிற்சியான வாள் – கேடயம் கற்றுள்ளார். பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இவர் ஜெட்லீ புக் ரிக்கார்டில் 3 முறை உலகசாதனை நிகழ்த்தி உள்ளார். தற்போது வாரவிடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி சிலம்பம் கற்று தருகிறார். வாழ்த்த 94872-69360.

Related posts

Leave a Comment