பறவைகள் கணக்கெடுப்பில் நேச்சர் கிளப்

ராஜபாளையம்:இயற்கையின் படைப்பான உலகப்பந்தில் அனைத்து உயிர்களுக்கும் இடம் உண்டு. இவற்றில் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கி வருவதே இதன் அதிசயம். இதில் மரங்களும் அதன் விதை பரவல் போன்ற இயற்கை சமன்பாடுகளுக்கு பறவைகளின் பங்களிப்பு முக்கியம்.


நாம் சாதாரணமாக கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் பறவைகள் சூழல்மாற்றத்தை குறியீடுகளாக வெளிப்படுத்துகிறது. இது பற்றி மாணவர்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் இயங்கி வரும் நேச்சர் கிளப் முக்கிய பங்காற்றி வருகிறது.


இதன் ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கூறுகையில்,”பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் மாணவர்களிடம் ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்.ஆண்டிற்கு ஒரு முறை தைப்பொங்கலை யொட்டி தமிழகம் முழுவதும் பறவைகளை கண்டறிந்து வகைகளை குறிப்பெடுக்கும் பணி நடைபெறும்.


பல்வேறு பறவைகளை கண்டு அது குறித்த முக்கியத்துத்தைமாணவர்களுக்கு தெரிவித்தும், இ-பேர்டு இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டது. அத்துடன் ஆசியன் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பில் 14 நீர்நிலைகளில் 120 பறவைகள் கணக்கிடப்பட்டன.பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கை காவலனான பறவைகளின் முக்கியத்துவத்தை கொண்டுசெல்வதே எங்கள் நோக்கம்,” என்றார். இவர்களது பணியை பாராட்ட 99442 11147 அழுத்தலாம்.

Related posts

Leave a Comment