கல்லுாரியில் ‘டைனமிக் டி 20’

சிவகாசி:சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி இயந்திரவியல் துறை சார்பில் டைனமிக் டி 20 என்ற தலைப்பில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழும தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார்.துறை தலைவர் கனகசபாபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் துவக்கி வைத்தார். கல்லுாரி டீன் மாரிச்சாமி, துாத்துக்குடி நியூட்டன் ஏஜென்சி இணை இயக்குநர் லாட்ஜன் ஜேக்கப் பேசினர். பல்வேறு கல்லுாரிகளிலிருந்து 750க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. துணை பேராசிரியர் ராமர் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment