சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் கருத்தரங்கம்

சிவகாசி;சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி உயிர்தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழும தாளாளர் சோலைச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குநர் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஷ்ணுராம் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் மாரிச்சாமி பேசினார். உயிர்தொழில்நுட்பவியல் துறை தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். கேரளா கோட்டயம் புனித கிட்ஸ் கல்லுாரி உணவு தொழில்நுட்பவியல் பேராசிரியர் ஹரிகிருஷ்ணன், புதுக்கோட்டை எச்.எச்., ராஜாஸ் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் பகுத்தறிவாளன், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தாவரவியல் துறை தலைவர் ரவீந்தர்சிங், சென்னை நுண்ணுயிரியல் மெடல் ஹெல்த்கேர் மகேஷ்குமார், சென்னை கிரீன் ட்ரி டெஸ்டிங் லேப் ஜேம்ஸ் தேவபிரபா, ராஜபாளையம் ஆன்ட்டிவைரஸ் சொசய்டி செல்வம் பேசினர். ராஜேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர்தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment