பொது மருத்துவ முகாம்

ராஜபாளையம்:ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி. நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் இகோ புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தியது. இகோ நிறுவன உரிமையாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பாதாள சாக்கடை திட்ட மேலாளர் மணி முன்னிலை வகித்தார். திட்ட ஆலோசகர் ரகுபதி வரவேற்றார்.மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் சங்கரன் தலைமையில் 170 பயனாளர்களுக்கு பரிசோதனை நடந்தது.ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரிய பாதள சாக்கடை திட்ட நிர்வாக செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற் பொறியாளர் காளிராஜன், உதவி பொறியாளர் வாசுகி ராஜன் செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment