முஸ்லிம்கள் மறியல்

அருப்புக் கோட்டை:சென்னை வண்ணாரப் பேட்டையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து, அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் முஸ்லிம்கள் ரோடு மறியல் செய்தனர்.வத்திராயிருப்பு : கூமாபட்டியில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்குமேல் ஆர்ப்பாட்டம் நடந்தது. வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முஸ்லிம்கள் தேசிய கொடியை கையிலேந்தி சாலை மறியல் செய்தனர். எஸ்.பி., பெருமாள், ஏ.எஸ்.பி., சிவபிரசாத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

Leave a Comment