விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நாட்டு நலப்பணி

விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், பழைய மாணவியர் சங்கம், லயன்ஸ் கிளப் தேவகி மருத்துவமனை இணைந்து தேசிய பெண் குழந்தை தின விழாவை முன்னிட்டு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நடந்தது. பேராசிரியர் முருகேசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். தேவகி மருத்துவமனை டாக்டர் ராஜராம் பயிற்சி அளித்தார். செவிலியர் அமுதா பரிசோதனை செய்தார். நாட்டு நல பணி திட்ட அதிகாரி புஷ்பவேணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நல பணி திட்ட அதிகாரிகள் ஜீவா, மகாலெட்சுமி செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment