ஹரீஸ் பள்ளி ஆண்டு விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் சங்கம்பட்டி ஹரீஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் 14 ஆவது ஆண்டு விழா நடந்தது. சிரிமத் ஆண்டவர் கல்லுாரி எமிரிட்ஸ் துறைதலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.மேலராஜகுலராமன் ஊராட்சி தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்..பள்ளி ஆலோசகர் கணேசன் வரவேற்றார்.பள்ளி தாளாளர் இந்திரா ஆண்டு அறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினராக 11 வது பட்டாளியன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கமாண்டோ ஜனகன்,டெபிட்டி கமாண்டோ கார்த்திகேயன்,திருப்பத்துார் ஏ.பி.எஸ்.ஏ .வணிகவியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியம் , நத்தம் ராம்சன்ஸ் பள்ளி தாளாளர் ராமசாமி கலந்து கொண்டனர்.விருந்தினர்களுக்கு மூலிகை செடிகள் வழங்கப்பட்டது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் சரவணக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்தானந்தம் மற்றும் நவீன் செய்திருந்தனர்.

Related posts

Leave a Comment