இராஜபாளையம் திருவள்ளுவர் மன்ற விழாவிற்கு வருகைபுரிந்துள்ள குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார்

இராஜபாளையம் திருவள்ளுவர் மன்ற விழாவிற்கு வருகைபுரிந்துள்ள குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் அவர்கள் டாக்டர் சாந்திலால் அவர்களின் அழைப்பினையேற்று சுந்தரி சாந்திலால் நூலகத்திற்கு இன்று காலை 09-30க்கு வருகைபுரிந்தார்கள். அழைத்துவரும் பொறுப்பினை சரவணன் அவர்களும் நானும் ஏற்றுக்கொண்டோம். ஓய்வறையிலிருந்து நூலகத்திற்கும், நூலகத்திலிருந்து திருவள்ளுவர் மன்றத்திற்கும் அடிகளார் காரில் அவருடன் இணைந்து செல்லும் வாய்ப்புகிட்டியது. அந்நேரத்திற்குள் எனைப்பற்றி அறிந்துகொண்டு பகிர்வு அறக்கட்டளை சிறப்படையட்டும் என்றதோடு நூலகத்தில் பெண்கள் அதிகமாக உள்ளதை பாராட்டினார். டாக்டர் சாந்திலால் உருவாக்கிய நூலகத்திற்கு மகிழ்வையும் வாழ்த்தையும் தெரிவித்தார். பன்மொழிப்புலவர் ஜெகந்நாதராஜா, தமிழ்ச் சங்கம் நரேந்திரகுமார், எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன், மணிமேகலைமன்ற கொ.மா. கோதண்டம் அவர்களைப்பற்றியும் விசாரித்தார். இராஜபாளையத்திலுள்ளவர்களைப் பற்றி நினைவுகூர்ந்தது மகிழ்வாய் இருந்தது.

https://www.facebook.com/anns.selva/videos/1893458060797661/

https://www.facebook.com/anns.selva/videos/1893459267464207/

Related posts

Leave a Comment