சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி

சிவகாசி : திருத்தங்கல்லில் பல்வேறு பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு, மீண்டும் முறையாக சீரமைக்கப்படாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருத்தங்கல் நகர் பகுதியில் பல்வேறு ரோடு, தெருக்களில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் சில மாதங்களுக்கு முன்னர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. தெருக்களில் உள்ள பேவர் பிளாக் கற்கள் பெயர்க்கப்பட்டது. குழாய் பதித்த பின்னர் சேதமடைந்த ரோடு, தெரு மீண்டும் முறையாக சீரமைக்கப்படவில்லை. சில தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே உள்ளது. தெருக்களில் பள்ளம் இருப்பதால் டூவீலர் செல்ல முடியவில்லை. நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளது.

இரவில் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளத்தை மறைத்து விடுவதால் பெரிய விபத்தும் ஏற்படுகிறது. எனவே குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு, தெருக்களை மீண்டும் முறையாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment