ISL 2019-20

கொச்சி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 2- 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 83வது நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் 16 மேட்சுகள் ஆடி 29 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரு எஃப்சி, 16 ஆட்டங்களில் 15 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் இருந்த‌ கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியை நேருக்கு நேர் சந்தித்த‌து.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு முந்தைய‌ மூன்று ஆட்டங்களில் 12 கோல்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்த அந்த அணி, பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்ற‌ ஆட்டத்தை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியுடன் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காமல் சமன் செய்தது. தனக்கு கீழே 2 அணிகளே உள்ள நிலையில், கடைசி அணிகளில் ஒன்று என்ற அவப்பெயரை தவிர்க்க கேரளா பிளாஸ்டர்ஸ் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு எஃப்சி, தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏனோ சொதப்பியது.

Related posts

Leave a Comment