பொது மருத்துவ முகாம்

சிவகாசி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை திட்டத்தின் கீழ் சிவகாசி ஆனையூர் ஊராட்சி மற்றும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரிசர்வ்லைன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைரகுமார் தலைமையில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிறுநீர் மற்றும் சளி பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன் பரிசோதனை இலவசமாக பார்க்கப்பட்டது. மகப்பேறு நலம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரம் குறித்த கண்காட்சி நடந்தது. சிவகாசி ஒன்றியம் துணை தலைவர் விவேகன்ராஜ், ஊராட்சி செயலர் நாகராஜ் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment