sattur

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் சுற்றித் திரியும் நபர்களை பராமரிக்க அரசு இல்லங்கள் ஏற்படுத்திட வேண்டும் என சமூக நலஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்டும், உறவினர்கள், குடும்பத்தினரை விட்டு பிரிந்து வந்து ஆதரவற்ற நிலையில் வீதிகளில் சுற்றி திரிபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் தமிழகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். உடைகள் கிழிந்தும், தாடி வளர்ந்தும் சுற்றித் திரிகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கும் ஆளாகின்றனர் .

பசியால் துன்புறும் போது ரோட்டில் நின்றபடி கூச்சலிடுவதுடன், சம்பந்தமில்லாமல் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபடுவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது திடீர் என ஆவேசப்படும் இவர்களை பார்த்து குழந்தைகள், பொதுமக்கள் அச்சப்படும் நிலையுள்ளது. உடைகள் கிழிந்தும், அரை நிர்வாணமாக சிலர் நகரில் சுற்றித் திரியும் பரிதாப காட்சிகளும் நடக்கிறது. அவர்களின் அலங்கோல நிலை கண்டு மனிதாபிமானத்துடன் சிலர் உடைகள் அளித்தும், உணவளித்தும் பராமரிக்கின்றனர்.

சில பகுதிகளில் மனநலம் பாதித்தவர்களை கடைக்காரர்கள் உணவு தந்து தண்ணீர் பிடிப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்ய வைக்கின்றனர். உறவுகளை பிரிந்து வீதியில் திரியும் மனநோயாளிகளை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.அரசு காப்பகம் தேவைபெற்றோர்களாலும், உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க தாலுகா தோறும் காப்பகங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment