AMMKcelebratesAMMA

புரட்சி தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாளையொட்டி கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் BE.,MLA அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்…#AMMK #AMMKThoothukudi #AMMKKovilPatti #TTVDhinakaran#AMMK celebrates AMMA72

Read More

golden words from one fine director about movie

(golden words from one fine director about movie)நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் தனது முதல் படமாக இயக்கி இருக்கும் ”கன்னி மாடம்” பார்த்தேன். சமீபத்தில் நான் பார்த்த ஒரு முழுமையான திரைப்படம் இதுவாகும். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதை சொல்லுகிற இயக்குனர் கிடைத்திருக்கிறார்.குறைவான வசனம்.அழுத்தமான காட்சிகள்.நிறைவான நடிப்பு.அலட்டல் இல்லாத ஷாட் மேக்கிங் என கன்னி மாடத்தை கவனமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். சாதிய ஆணவக்கொலைகளை கருவாகக்கொண்டு அடுத்து அடுத்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்து ஒரு சாதிய ஆணவக்கொலையை கருவாக்கொண்ட திரைப்படம் தான் கன்னி மாடம்.என்றாலும் கதை சொல்லப்பட்டிருக்கிற விதம்,படம்பிடிக்கப்பட்டுள்ள நேர்த்தி இவற்றில் இது மாறுபடுகிறது. போஸ் வெங்கட் அவர்கள் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதை முதல் படத்திலேயே நிறுவியிருக்கிறார்.அவர் எடுத்துக்கொண்ட கதையை எந்த குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகவும்,விறுவிறுப்பாகவும்…

Read More

வெடி விபத்து ஆலை

தன் உயிரையும் பொருட் படுத்தாமல் உன்னாதமாக செயல்பட்ட சின்னக்காமன்பட்டி ஊர் மக்களுக்கு எனது பாராட்டுக்கள் 🙏 108 வாகனத்திற்கு எதிர் பார்க்காமல் தனது வாகனத்தின் முலம் ஊர் மக்களுக்கு உதவியா செல்வலட்சுமி பயர் ஒர்க்ஸ் தொழிலைக்கு ஊர் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏வெடி விபத்து ஆலை சுரியா பிரபா

Read More

அன்பார்ந்த நெடுஞ்சாலை துறையே!!!

சிவகாசி – ஸ்ரீவி ரோடு முழுவதும் எந்த இடத்திலும் மின்விளக்குகள் கூட இல்லை. இதனால் AJ College, மற்றும் ஈன்சார் அருகே தினமும் ஒரு விபத்து நடக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு எதிரில் வரும் வாகனத்தின் மின் ஒளி மட்டும் தெரிகின்றது அது எந்த வாகனம் என்று கூட தெரிவதில்லை. இது போன்று மிதி வண்டியில் செல்வோருக்கு இதை விட மிக கொடுமையான பயணமாக உள்ளது. ரோட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரை செல்லும் போது மரண பீதியாக உள்ளது. ஏதேனும் ஒரு சில இடன்களாவது மின் கம்பங்கள் வேண்டும்.மாறுமா !!!=????

Read More

சிவகாசி சிறுமி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கக்கோரி போக்சோ நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கடந்த மாதம் 21ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து மோஜம்அலி அன்பவரை கைதுசெய்தனர். இதற்கிடையே கொலையான சிறுமியின் பெற்றோரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையைப் பறிகொடுத்த தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மனு கொடுத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த மனு மீதான விசாரணைக்காக, கொலைசெய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் காவல்துறை விசாரணை அதிகாரி ஆகியோர் இம்மாதம்…

Read More

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி

அனைவருக்கும் வணக்கம்.. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இந்த ஆண்டு முதல் NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியின் நோக்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கையேடு மற்றும் வினாத்தாள்களை நகல் எடுக்க ஆகும் செலவுகளுக்கு மாணவர் ஒருவருக்கு நாளோன்றிக்கு தலா 100 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 3500 ரூபாய் மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….. இதனை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு அனைத்து நண்பர்களும் share செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்… தொடர்புக்கு முனைவர்.டென்சிங் பாலையா அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சிவகாசி +91 97869 22782

Read More

*விருதுநகர் மாவட்டம் 17.02.2020*

சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருத்தங்கல் போக்குவரத்து *காவல் ஆய்வாளர் திரு.சுடலைமணி* அவர்கள், திருத்தங்கல் சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்த நபர்களுக்கு சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்ததோடு, வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஓட்டினார்.

Read More

விருதுநகர் மாவட்டம் 20.02.2020

மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பாக, மல்லாங்கிணறு M.N.M.S.P.S மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.C.ராஜா அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம்,குழந்தை கடத்தல்,பாலியல் துன்புறுத்தலில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது,POCSO ACT சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098, சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பெண்கள்,குழந்தைகள், முதியோர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்.

Read More