கோயில் சிலைகள் வயலில் வீச்சு

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே -சுந்தரராஜபுரம் கோயில் சிலைகளை பெயர்த்து வயல்பகுதியில் வீசியது தொடர்பாக சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். ராஜபாளையம் அடுத்த சுந்தர்ராஜபுரம் கொசவன் குளம் கண்மாய் கரை அருகே ஆலமரத்தடி முனீஸ்வரன், காளியம்மன் கோயில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு கோயில் சுற்று பிரகாரத்தில் இருந்த விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் கருப்பசாமி சிலைகளை பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்த விஷமிகள் அதை விவசாய நிலத்தில் வீசி உள்ளனர். சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment