சிவகாசி சிறுமி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கக்கோரி போக்சோ நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கடந்த மாதம் 21ம் தேதி கொலைசெய்யப்பட்டார்.

இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து மோஜம்அலி அன்பவரை கைதுசெய்தனர். இதற்கிடையே கொலையான சிறுமியின் பெற்றோரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தையைப் பறிகொடுத்த தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மனு கொடுத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து, இந்த மனு மீதான விசாரணைக்காக, கொலைசெய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் காவல்துறை விசாரணை அதிகாரி ஆகியோர் இம்மாதம் 26-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

Related posts

Leave a Comment