பட்டாசு உற்பத்தியில் குழந்தை தொழிலாளர்

சாத்துார்:பட்டாசு தொழிலாளர்களை கான்ட்ராக்ட் முறையில் வேலையில் ஈடுபடுத்த கூடாது, பட்டாசு ஆலை அறைகளை குத்தகைக்கு விட கூடாது, குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என்பது போன்ற முக்கியமான பாதுகாப்பு விதிகளை பெரும்பாலான ஆலைகள் கண்டுகொள்வதில்லை.

இதனாலே விபத்தும் தொடர்கின்றன. இந்நிலையில் நேற்று சாத்துார் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் மீனம்பட்டியை சேர்ந்த கார்த்திக் 17, இறந்தார். இவர் பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்த இவர் நேற்றுதான் முதல்நாள் பட்டாசு தொழிலுக்கு சென்று பலியாகி உள்ளார்.

இதிலிருந்தே பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. மனித உயிர்களை விட பணத்தாசையே முக்கியம் என ஆலை உரிமையாளர்களும், அதிகாரிகளும் நினைப்பது தான் விபத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணமாக அமைவதாக மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுகிறது.

Related posts

Leave a Comment