பயிற்சி பணிமனை

சிவகாசி;சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மகளிர் மன்றம் சார்பில் மாணவிகளுக்காக ‘மகளிர் தற்காப்புக்கலை’ என்ற பொருண்மையில் பயிற்சி பணிமனை நடந்தது. மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரிபயா மீரா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாராணி, மாவட்ட விளையாட்டு கராத்தே கழகம் தலைவர் தங்கராஜ் பேசினர். 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மகளிர் மன்ற உறுப்பினர் கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment