முதல்வர் விழாவிற்கு பந்தல்கால்

விருதுநகர்:விருதுநகரில் நடக்க உள்ள மருத்துவகல்லுாரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி வர உள்ளதை அடுத்து விழா பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மார்ச் 1ல் அரசு மருத்துவ கல்லுாரி, புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கிறார். இதற்கான விழா பந்தல்காலை கலெக்டர் கண்ணன் நட்டு பணிகளை துவங்கி வைத்தார். எஸ்.பி., பெருமாள் முன்னிலை வகித்தார்.

டி.ஆர்.ஓ., உதயக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்

பலராம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, துணைத்தலைவர் முத்துலெட்சுமி, மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், கூரைக்கூண்டு ஊராட்சி தலைவர் செல்வி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment