golden words from one fine director about movie

(golden words from one fine director about movie)நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் தனது முதல் படமாக இயக்கி இருக்கும் ”கன்னி மாடம்” பார்த்தேன்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு முழுமையான திரைப்படம் இதுவாகும்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதை சொல்லுகிற இயக்குனர் கிடைத்திருக்கிறார்.குறைவான வசனம்.அழுத்தமான காட்சிகள்.நிறைவான நடிப்பு.அலட்டல் இல்லாத ஷாட் மேக்கிங் என 
கன்னி மாடத்தை கவனமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

சாதிய ஆணவக்கொலைகளை கருவாகக்கொண்டு அடுத்து அடுத்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்து ஒரு சாதிய ஆணவக்கொலையை கருவாக்கொண்ட திரைப்படம் தான் கன்னி மாடம்.என்றாலும் கதை சொல்லப்பட்டிருக்கிற விதம்,படம்பிடிக்கப்பட்டுள்ள நேர்த்தி இவற்றில் இது மாறுபடுகிறது.

போஸ் வெங்கட் அவர்கள் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதை முதல் படத்திலேயே நிறுவியிருக்கிறார்.அவர் எடுத்துக்கொண்ட கதையை எந்த குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகவும்,
விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.

நடிகர்களிடம் வேலை வாங்கி இருக்கிற விதம் மிக சிறப்பாக இருக்கிறது.யாரும் புது முகம் என்று சொல்ல முடியாத விதத்தில் நடித்துள்ளனர்.புது முகங்கள் இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது சிரமம்.ஆனால் அதை புதுமுகங்களை வைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார் போஸ் வெங்கட் அவர்கள்.

படம் தொடக்கம் நடு,முடிவு என ஒரு அழகான சிறுகதை போல முடிகிறது.படம் முடியும் போது ஏற்படுகிற வலியை தவிர்கவே முடியாது.கல் நெஞ்சையும் கரைத்து விடுகிற வலி.திரையரங்கு ஒரு நொடி உறைந்து போய் விட்டது.அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்தது.யாருமே எதிர் பார்க்காத கிளைமாக்ஸ்.

இப்படியான திரைப்படங்கள் தான் வெற்றியடைய வேண்டும்.பெரும் நடிகர்களை வைத்துக்கொண்டு கூத்தடிக்காமல் புது முகங்களை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான கதையை,சமூக அக்கறையோடு பதிவு செய்திருக்கும் இயக்குனர் போஸ் வெங்கட் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

படத்தில் ஹாரிஸ் ஜே இனியனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் சிறப்பாக இருக்கிறது.குறிப்பாக ”டைட் குளோசப் ஷட்ஸ்” மூலமாக கதை சொல்லி இருப்பது அழகு.இயக்குனரின் கதை சொல்லுகிற பாணியை புதிய பாணியாக மாற்றியிருப்பதே ஒளிப்பதிவு தான்.அதே போல இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பும் கதை சொல்லுவதற்கு பேருதவி செய்திருக்கிறது.உறுத்தலற்ற படத்தொகுப்பு.
இசையும் கதையோடு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறது.

கன்னிமாடம் படத்தில் நடிகர்களுக்கு இணையாக தொழிற்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை புதிய முயற்சிகளை இரு கரம் நீட்டி வரவேற்பார்கள்.அந்த வகையில் போஸ் வெங்கட் அவர்கள் இயக்கி இருக்கிற கன்னி மாடம் திரைப்படத்தையும் முழுமனதோடு ஏற்று பெரும் வெற்றியடையச் செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது.

போஸ் வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கன்னி மாடம் மறக்க முடியாத ஒரு கவிதை.

-சோழன் மு.களஞ்சியம்.
திரைப்பட இயக்குனர். (pls share and support)

Related posts

Leave a Comment