“தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!”.. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்

சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச தாய்மொழி தினம் நமது நாட்டிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் நம் தாய்மொழியும், தொன்மை வாய்ந்த மொழியுமான தமிழ் மொழியின் பெருமையையும் பாராட்டி சோஷியல் மீடியாவில் கருத்துக்களையும், பெருமைமிகு வரிகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களும், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழின் அருமை பெருமைகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டும், வெளிப்படுத்தியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் உலக தாய்மொழி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம்!

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்!

Related posts

Leave a Comment