#நேர்படப்பேசு

#இராஜபாளையம்_நகராட்சியின் #கவனத்திற்கு

மக்களுக்கான செயல்பாடுகள் சிரமங்களை கொடுத்தாலும் பொறுப்போம் வேலை முடிந்தவுடன் சரியாயிடும் என்று எத்தனை நாட்களை கடத்தமுடியும். இராஜபாளையம் பெத்தையா தெரு மாறன்ஆஸ்பத்திரி எதிரேயுள்ள சந்தில்15 நாட்களுக்கு மேலாக இன்றளவும் எரியாத தெருவிளக்கு மின்சாரத்துறை நண்பர் ஒருவர் முறையிட்டும் நகராட்சியிலிருந்து எந்தவித பதிலும் இல்லை, பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூன்று மாதத்திற்கு முன் மேடுபள்ளமாக மூடியபின் இன்று வரை நகராட்சி குடிதண்ணீர் வரவில்லை. பலமுறை பெண்களின் முறையீட்டுக்குப்பின் நகராட்சியினரும் மூடிய குழிகளை தோண்டிப்பார்த்து ஆராய்ச்சி செய்து பார்க்கின்றனர், எங்கே குழாயில் அடைப்புள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆங்காங்கே குழிகள் தோண்டி மூடாமலுள்ளது, தெருவிளக்கு எரியாமல் குழியும் மூடாமல் எத்தனை சிரமங்கள்…. மூன்று மாதமாக குடிநீர் வராமலும் மேலும் சிரமம்வேறு. தெரு முனை மின்மோட்டார் மூலம் வரும்போர்வெல் தண்ணீர் குழாயும் பாதாளச்சாக்கடைக்காகத் தோண்டியதில் தரைத்தளத்தில் நீர்வெளியேறி பழுது…. நகராட்சியினர் இதனை விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.
அவசர உடனடி சீரமைப்பு முதலில் மின்விளக்கு
(தோண்டப்பட்ட குழிகள் இருட்டில் தெரிவதில்லை)
பின்னர் குடிநீர் குழாய்கள் சீரமைப்பு..
– Selvakumar Rajapalayam
RAJAPALAYAM FACEBOOK FRIENDS

Related posts

Leave a Comment