விருதுநகர் மாவட்டம் 21.02.2020

விருதுநகர் மாவட்டம் 21.02.2020

அருப்புகோட்டை டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிட்ஸ் நர்சரி பள்ளியில் கல்வி பயின்று வரும் 50 குழந்தைகளை,

அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு. த.பாலமுருகன் அவர்கள், பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் காவல் நிலையத்திற்கு குழந்தைகளை வரவழைத்தார். காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்கப்பட்டது.

இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு காவல் நிலையம் என்றால் என்ன, காவல் நிலையம் செயல்படுவதன் நோக்கம், காவல்துறையினர் பொதுமக்களுக்கு நண்பன், காவல்துறையினரின் பணி விபரம், எல்லா சூழலிலும் காவல்துறையின் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்ததுடன், காவல் நிலையத்தில் இயங்கும் உடற்பயிற்சி கூடம், நூலகம், தோட்டம் ஆகியவற்றையும் காண்பித்து, சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பது சம்பந்தமாகவும், மரம் நடுவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.

இறுதியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்ட காவல்துறை

#TamilNaduPolice
#TNPolice
#TruthAloneTriumphs
#szsocialmedia1
#virudhunagar
#childrensawareness

Related posts

Leave a Comment