கமல்ஹாசன் அழைப்பு!

என் மொத்த சொத்தும் நீங்கதான்.. ஓய்வுக்கு நமக்கு நேரமில்லை.. செயல் மட்டுமே..

சென்னை: “என் மொத்த சொத்து எல்லாமே நீங்கதான்.. ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை… அடுத்து வரும் நாட்களெல்லாம் ‘செயல்’, ‘செயல்’ மட்டுமே” என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோளும் அறைகூவலும் விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.. 2018 ஆம் ஆண்டு, பிப்.21ல் கமல்ஹாசன் கட்சியை தொடங்கினார்… அதற்குள் ஒரு தேர்தலையும் சந்தித்து, அதில், 3.72 சதவீதம் வாக்குகளையும் பெற்றார்.

கிராம சபையை முன்னெடுத்து வந்தாலும், கிராமப்புறத்தைவிட, நகர்ப்புற மக்களே இக்கட்சிக்கு பெரும் வாக்குகளை செலுத்தி இருந்தனர்… எனினும், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் மய்யம் போட்டியிடவில்லை.

சவால்கள் இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டிற்குள் நுழைகிறது. இதனை மய்ய உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள்தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment