விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகாசி : சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் தீ விபத்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தார். மாணவி கனிமொழி வரவேற்றார். சிவகாசி தீயணைப்பு துறை அதிகாரி பாலமுருகன் பேசினார். தீயணைப்பு அதிகாரிகள் தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர். மாணவி சுபிதா நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment