விருதுநகர் மாவட்டம் 24.02.2020

குழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, விருதுநகரில் உள்ள ஷத்ரிய பெண்கள் நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி, அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். விருதுநகர் மாவட்ட காவல்துறை#TamilNaduPolice#TNPolice#TruthAloneTruimphs#szsocialmedia1#virudhunagar#childrenssafetyawareness

Read More

விருதுநகர் மாவட்டம் 24.02.2020

விபத்தில் மரணமடைந்த நத்தம்பட்டி காவல் நிலைய காவலர் திரு. கார்த்திக்பாண்டியன் அவர்கள் குடும்பத்திற்கு உதவும் விதமாக 2008 பேட்ச் காவலர்கள் திரட்டிய ரூபாய் 2,50,000/- பணத்தை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள், கார்த்திக்பாண்டியன் அவர்களின் மனைவி ருத்ராவிடம் வழங்கினார். விருதுநகர் மாவட்ட காவல்துறை #TamilNaduPolice#TNPolice#TruthAloneTriumphs#szsocialmedia1#virudhunagar

Read More

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார். கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அரசின் 3 ஆண்டு திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க வீடியோ படக்காட்சி நடத்தப்பட்டது. பின்னர் பஸ் ஸ்டாண்டில் ரூ.194 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடங்கள், பயணியர் நிழற்குடை கட்டடங்களை அமைச்சர்ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், சிவகாசி தாசில்தார் வெங்கடேஷ் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

பிப். 28 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால், வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் பிப். 28 முதல் மார்ச் 19 வரை நடக்கவுள்ளது. கால், வாய் கேமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் தடுப்பூசி போடாமல் இருத்தல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பால் ஏற்படுகிறது. 2 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் 3 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகள், கால்நடைகளுக்கு கால், வாய் கோமாரி நோய் முகாமில் பங்கேற்று தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Read More

#வெற்றி_பெற்ற_கால்பந்து_வீரர்களுடன்_பரிசு #வழங்கிய_பொது

#வெற்றி_பெற்ற_கால்பந்து_வீரர்களுடன்_பரிசு #வழங்கிய_பொது#ஆணையூர்_ஊராட்சி_மன்ற_தலைவர் #வீ.லட்சுமிநாராயணன்#Website linkwww.vlakshminarayanan.com

Read More

வளர்ந்தால்தான் தெரிகிறது மரங்களின் அருமை…

இன்றைய அறிவியல் உலகில் மாசுக்கள் அதிகரித்து, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களின் இருபுறமும், மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இன்று அவற்றின் நிழலில் இருந்து, இயற்கை காற்றை சுவாசித்து தங்களது கைத்தறி நெசவு தொழிலை செய்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி நெசவாளர்கள். நவீன தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இன்றைய இளைஞர்கள் குளிரூட்டபட்ட அறைகள் அமைந்துள்ள அலுவலகங்களில் பல மணிநேரம் இருந்து பணியாற்றுகின்றனர். அவ்வாறான இளைஞர்கள் நடைமுறை வாழ்க்கையில் சிறிய வெயிலைக்கூட தாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர். பல்வேறு சுவாசக்கோளாறு நோய்களுக்கும் ஆளாகின்றனர். ஆனால், இயற்கையின் அருட்கொடையாய் விளங்கும் மரங்களின் நிழலில் இருந்து பணியாற்றுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதியில் மாரியம்மன் கோயில் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்கள், ஊரணிபட்டி,…

Read More

ஆலோசனை கூட்டம்

சிவகாசி : சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் சிவகாசி சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்பாபு முன்னிலை வகித்தார். நுாற்றாண்டுக்குரிய திட்டப்பணிகள் தயாரித்தல், நிதி ஒதுக்கீடு கோருதல், நகராட்சி பகுதிகளில் எந்தந்த அத்தியாவசிய பணிகள் செய்து உள்கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றுதல், சுகாதாரம் மேம்படுத்துதல் , கழிவுநீர் சுத்திகரிப்பு , வாகன காப்பகம் ஏற்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை மீட்டெடுத்தல், ஒப்படைக்கப்படாத பூங்கா இடங்களையும், மூடப்பட்ட நீர்நிலைகளையும் கண்டறிந்து திறக்க நடவடிக்கை எடுப்பது போன்ற அத்தியாவசிய பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இதில் வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Read More

3ம் ஆண்டு துவக்க விழா

விருதுநகர்,: விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விருதுநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 100 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. விருதுநகர் தெப்பம் கிழக்கு பஜாரில் 1,000 நபர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நரி்வாகிகள் சங்கர், நாகேந்திரன், விஜயக்குமார், நெல்சன், நிக்கோலஸ், கவியரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Read More

அருப்புக்கோட்டையில் மாரத்தான் போட்டி

அருப்புக்கோட்டை : சிங்கப்பூர் கன்ஸ்ட்ரக் ஷன் மாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வனத்திற்குள் அருப்புக்கோட்டை சார்பில், தேச ஒற்றுமை மற்றும் உலக மக்கள் நன்மைக்காக, ‘மாஸ் மாரத்தான் போட்டி’ அருப்புக்கோட்டை அல்-அமீன் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கு ஒன்பதே முக்கால் கிலோ மீட்டர் துாரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் துாரம் ஓடினர். ஆண்கள் போட்டியை டி.எஸ்.பி., வெங்கடேசன் மற்றும் பெண்கள் போட்டியை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இருவரும் பரிசுகள் வழங்கினர். இதில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

நான்கு, ஆறு வழிச்சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க அரசு வழி காணுமா?

நரிக்குடி : நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் சென்டர் மீடியனால் நடக்கிறது. டயர் வெடித்து எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க சென்டர் மீடியனில் உள்ள சுவற்றின் உயரத்தை உயர்த்தினால், பெருமளவிலான விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க முடியும். மாவட்டத்தில், வாகனங்கள் பெருகி வரும் சூழ்நிலையில் அதற்கு ஏற்ற வகையிலான ரோடு அமைப்புகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான ரோடுகள் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள கட்டமைப்பின்படி வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்ல முடியாத வகையில் சென்டர் மீடியன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்திசையில் வரும் வாகனங்கள் தொந்தரவில்லாமல் செல்ல வசதி செய்தபோதும், டயர் வெடித்தும், அதிவேகமாக வரும் வாகனங்களும் பெரும்பாலும் சென்டர் மீடியனில் உள்ள சுவற்றில் உரசி விபத்துக்குள்ளாகின்றன. என்னதான் சீட் பெல்ட், ஹெல்மெட்…

Read More