சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அரசின் 3 ஆண்டு திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க வீடியோ படக்காட்சி நடத்தப்பட்டது. பின்னர் பஸ் ஸ்டாண்டில் ரூ.194 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டடங்கள், பயணியர் நிழற்குடை கட்டடங்களை அமைச்சர்ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சுபாஷினி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், சிவகாசி தாசில்தார் வெங்கடேஷ் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.