அருப்புக்கோட்டையில் மாரத்தான் போட்டி

அருப்புக்கோட்டை : சிங்கப்பூர் கன்ஸ்ட்ரக் ஷன் மாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வனத்திற்குள் அருப்புக்கோட்டை சார்பில், தேச ஒற்றுமை மற்றும் உலக மக்கள் நன்மைக்காக, ‘மாஸ் மாரத்தான் போட்டி’ அருப்புக்கோட்டை அல்-அமீன் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கு ஒன்பதே முக்கால் கிலோ மீட்டர் துாரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் துாரம் ஓடினர். ஆண்கள் போட்டியை டி.எஸ்.பி., வெங்கடேசன் மற்றும் பெண்கள் போட்டியை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு இருவரும் பரிசுகள் வழங்கினர். இதில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment