ஆலோசனை கூட்டம்

சிவகாசி : சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் சிவகாசி சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்பாபு முன்னிலை வகித்தார். நுாற்றாண்டுக்குரிய திட்டப்பணிகள் தயாரித்தல், நிதி ஒதுக்கீடு கோருதல், நகராட்சி பகுதிகளில் எந்தந்த அத்தியாவசிய பணிகள் செய்து உள்கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றுதல், சுகாதாரம் மேம்படுத்துதல் , கழிவுநீர் சுத்திகரிப்பு , வாகன காப்பகம் ஏற்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை மீட்டெடுத்தல், ஒப்படைக்கப்படாத பூங்கா இடங்களையும், மூடப்பட்ட நீர்நிலைகளையும் கண்டறிந்து திறக்க நடவடிக்கை எடுப்பது போன்ற அத்தியாவசிய பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இதில் வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment